செவ்வாய், செப்டம்பர் 22, 2020

தேசம்

img

ஜார்க்கண்டிலும் பலத்த அடி கொடுத்த வாக்காளர்கள்... இந்தியாவின் வரைபடத்தில் சுருங்கும் பாஜக

புதுதில்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில், ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்துள்ளனர்.ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர்30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவில், டிசம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 81 தொகுதிகளில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, (ஜேஎம்எம்), காங்கிரஸ்- ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி 47 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது. தனியாக களமிறங்கிய பாஜக 25 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்து, ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. பாஜக தன் வசமிருந்த12 தொகுதிகளை இழந்துள்ளது.காங்கிரஸ் கடந்த தேர்தலைவிட 10 தொகுதிகளையும், ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா 11 தொகுதிகளையும் கூடுதலாக வென்றுள்ளன.இது பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 2000-ஆவது ஆண் டில் ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான முதல் கடந்த 19 ஆண்டுகளில் பாஜகமட்டும் 15 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளது. முதலாவது சட்டசபைத் தேர்தலில் 32 தொகுதிகளிலும், 2005 தேர்தலில்30 தொகுதிகளையும், 2009இல் 18 தொகுதிகளிலும், 2014 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 37 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போது 25 தொகுதிகளாக சுருங்கியுள்ளது.

சுயேச்சையிடம் தோல்வி
ஜார்க்கண்ட் தேர்தலில் கடந்த 5 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்த முதல்வர் ரகுபர்தாஸ், இம்முறை ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரயூ ராயிடம் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் தோல்வி அடைந்துள்ளார். இத் தொகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு 70 வாக்குகள் வித்தியாசத்தில் ரகுபர்தாஸ் வெற்றி பெற்றிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ரகுபரை தோற்கடித்தசரயூ ராய், முன்னாள் அமைச்சர் ஆவார்.பாஜக தனக்கு சீட் வழங்காததால் சுயேச்சையாக களமிறங்கி இருந்தார். 

5 மாநிலங்களில்  ஆட்சி போனது
இவை ஒருபுறமிருக்க, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் வரிசையில்ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட்டிலும் தோற்றதால், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 16 ஆக குறைந்துள்ளது.2017- ஆம் ஆண்டில் மொத்த இந்தியாவில் 71 சதவிகித மக்கள்- மாநில பாஜகஆட்சியின் கீழ் இருந்தனர். இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அது வெறும் 40 சதவிகிதமாக சரிந்துள்ளது. 2014- ஆம் ஆண்டில் பாஜக வசம்வெறும் 7 மாநிலங்களே இருந்தன. இது2015-இல் 13 ஆக வளர்ச்சியடைந்தது. 2016-இல் 15 ஆகவும், 2017-இல் 19 ஆகவும் அதிகரித்தது. உச்சக்கட்டமாக, 2018- ஆம் ஆண்டு 21 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி விரிந்து பரந்தது. ஆனால், 2018 இறுதியிலும் 2019 மத்தியிலும் நடைபெற்ற தேர்தல்களில்- ஹரியானாவில் மட்டும், துஷ்யந்த் சவுதாலாவுடன் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்ததால், மறுபடியும் பாஜக ஆட்சியை பிடித்தது. அதேபோல கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்களை வளைத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், பாஜகவின் கோட்டையாக இருந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிர மாநிலங்களை பாஜக இழந்தது. மிசோரம், தெலுங்கானா, ஆந்திரா,ஒடிசா போன்றவை மாநிலக் கட்சிகளிடம் சென்றன. அதைத்தொடர்ந்தே தற்போது ஜார்க்கண்டும் பாஜகவிடமிருந்து பறிபோயிருக்கிறது.

;