வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

img

மொத்த நிதித் தொகுப்பு ரூ.3.22 லட்சம் கோடிதான்... நிதியமைச்சருடன் விவாதத்திற்கும் நான் தயார்!

புதுதில்லி:
பிரதமர் மோடி அறிவித்த “ஆத்மநிர்பர் பாரத் அபியான்” என்ற பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் மொத்தம் 20 லட்சத்து97 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட் டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தம்பட்டம் அடித்திருந்தார்.

ஆனால், முன்னாள் வர்த்தகத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்தசெய்தித்தொடர்பாளருமான ஆனந்த்சர்மா இந்த கணக்கை மறுத்துள்ளார். இதுதொடர்பாக புதுதில்லியில்காணொலி மூலம் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.அதில், “மத்திய அரசு கடந்த சிலநாட்களாக அறிவித்த பொருளாதார நிதித்தொகுப்பின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடிதான். அதாவது நாட்டின் ஜிடிபியில் 1.6 சதவிகிதம்தான். பிரதமர் மோடி சொல் வதுபோல் அந்தத் திட்டங்களின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி இல்லை”என்று கூறியுள்ளார். 

“நான் நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனுக்குச் சவால் விடுக்கிறேன். பொருளாதார நிதித்தொகுப்பு தொடர்பாக நான் தரும் புள்ளிவிவரங்களை மத்திய அரசு தவறு என நிரூபிக்க முடியுமா? அதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னுடன் வாதிடத் தயாரா?” என்றும் கேட்டுள்ளார்.“பொருளாதார உந்துசக்திக்கு மீட்புத் திட்டங்களை அறிவிப்பதற்கும்- மக்களுக்குக் கடன் கொடுப்பதற்கும்- நிறுவனங்களுக்குக் கடன்கொடுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது” என்று கூறியிருக்கும் ஆனந்த் சர்மா, “சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஏழைகள் கைகளில் பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரதமர்மோடி எடுத்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் இயல்புப் பாதைக்குக் கொண்டுவர முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்கும் ஆனந்த்சர்மா பதிலளித்துள்ளார். “எதிர்க்கட்சிகளை அற்பமானவர்கள் என நிதியமைச்சர் கூறுகிறார்; ஆனால், இந்த தேசம் நிதியமைச்சரிடம் இருந்து மிகவும் தீவிர மான, பொறுப்பான, மரியாதைக்குரிய பதிலை எதிர்பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.

“மத்திய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால், சாலையில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இந்த தேசத்திற்கும்,நிதியமைச்சர் பதில் சொல்ல வேண்டும்; ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளையும், சட்ட உரிமைகளையும் அழித்தமைக்காக மத்திய அரசு ஏழைமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றும் சர்மா வலியுறுத்தியுள் ளார்.

;