தேசம்

img

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை... காவல் ஆய்வாளர் உட்பட 9 போலீசார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுதில்லி:
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், விசாரணை நடத்தி வரும் சிபிஐ, சனிக்கிழமையன்று காவல் அதிகாரிகள் உட்பட 9  காவல்துறையினர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய் தது.

தந்தை - மகன் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள 9 காவல்துறையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் சிபிஐ, ஜெயராஜ், பென்னிக்ஸ்  இருவரும் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள ளது.சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (35) ஆகியோர் காவல்துறையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் உயர்நீதிமன்ற  மதுரை கிளையின் உத்தரவின்பேரில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில்கைதான சிறப்பு சார்பு ஆய்வாளர்  பால்துரை கொரோனாவால் இறந்தார். இதனால் மற்ற 9 பேர் மீதானவிசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம்சென்று, பென்னிக்ஸ் கடை அருகே உள்ள கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், அவரது வீட்டருகேஉள்ள உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.மேலும், இந்த வழக்கு தொடா்பாக சாட்சியாக சோ்க்கப்பட்டுள்ள வழக்கறிஞர் மணிமாறன், பத்து பேரை நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.இந்த நிலையில், சனிக்கிழமை இந்த வழக்கில்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த வழக்கை தாமாக முன்வந்துநடத்தி வரும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்தவழக்கு விசாரணை எப்போது  முடிவுக்கு வரும் என்றுசிபிஐயிடம் கேள்வி எழுப்பியது. மேலும், இதுதொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சிபிஐ பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிகையில் உள்ள காவலர்கள் விவரம்:

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் கே.பாலகிருஷ்ணன், பி.ரகுகணேஷ், தலைமைக்காவலர்கள் எஸ்.முருகன், ஏ.சாமதுரை, காவலர்கள் எம்.முத்துராஜா, எஸ்.செல்லத்துரை, எக்ஸ்.தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து.இவர்கள் மீது கிரிமினல் சதி, கொலை, தவறானசிறைவாசம், ஆதாரங்களை அழித்தல் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தல் ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே.கௌர் கூறியதாவது:‘‘தந்தை-மகன் ஆகியோர் 2020 ஜூன் 19 அன்றுகைது செய்யப்பட்டு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரவில் சித்ரவதை செய்யப்பட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் காயங்களுக்கு ஆளாகி ஜூன் 22 மற்றும் 23 தேதிகளில் இறந்தனர்” என்றார். 

பெயர் குறிப்பிட விரும்பாத  அதிகாரி ஒருவர்கூறுகையில், “சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகள் அவர்களின் தவறான செயல்களை மூடிமறைக்க, சித்ரவதைக்கான ஆதாரங்களை அழித்ததுமட்டுமல்லாமல், தந்தை மற்றும் மகன் ஆகியோர் தங்களது கடைகளை மூடவில்லை என்று  இருவர் மீதும் பொய்யான வழக்குகளை பதிவு செய்தனர். அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகும் மொபைல் கடையை திறந்திருந்தது. அதன் மூலம் ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தந்தை, மகன் கொலையில் மற்றவர் களுக்கு உள்ள பங்கு, கொலையை மூடி மறைக்கமுயற்சித்தது ஏன் என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

;