தேசம்

img

ஐஐடிகளில் தற்கொலைகளை தடுக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

ஐஐடிகளில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் மன அழுத்தம், சாதிய பாகுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் சக மாணவர்களும் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் ஐஐடிகளில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்க வலியுறுத்தி கவுரவ் குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் உள்ளனர். இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கவுரவ் குமாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் அந்த  மனுவையும்  தள்ளுபடி செய்தது.
 

;