ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேசம்

img

பிரதமர் அலுவலகம் மட்டுமே பிரச்சனைகளை தீர்த்துவிட முடியாது... எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளும் முக்கியம்

புதுதில்லி:
“கொரோனா தாக்கத்தையொட்டி, இந்தியப் பொருளாதாரம் முன்பைவிட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும்போது, பிரதமர் அலுவலகம் மட்டுமே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுகண்டு விட முடியாது” என்று ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இந்த நேரத்தில், எதிர்க்கட்சிகளைக் கலந்தாலோசித்து, அவர்கள் தரப்பிலிருந்து வரும் சரியான யோசனைகளையும் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று கூறியிருக்கும் ரகுராம் ராஜன், “நாட்டில் நிறைய திறமையானவர்கள் உள்ளனர். அவர்களைப் பயன்படுத்த இந்த அரசு தயங்கக்கூடாது” என்று குறிப்பிட்டுள் ளார்.பாஜக-விலேயே கூடமுன்னாள் நிதியமைச்சராக இருந்த ஒருவர்இருப்பதாக யஷ்வந்த் சின்காவை, கைகாட்டியுள்ள ரகுராம் ராஜன், “அரசியல் வேறுபாடுகள் இந்த நேரத்தில் மறக்கப்பட வேண்டும். வெறுமனே கொரோனா வைரஸால் நிகழ்ந்த பாதிப்பை மட்டுமல்ல; கடந்த மூன்று - நான்கு ஆண்டுகளாக ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் அதன் பின்விளைவுகளையும் சரிசெய்ய வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.

;