ஞாயிறு, அக்டோபர் 25, 2020

தேசம்

img

மும்பை கட்டிட விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

மும்பையில் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த திங்களன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 

;