ஞாயிறு, அக்டோபர் 25, 2020

தேசம்

img

பிரிவினை அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை கட்டுவோம்... இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அழைப்பு

புதுதில்லி:
நாட்டில் பிரிவினை அரசியல் நிறைய நடந்தாலும், மக்கள் ஒன்றுபட்டு இருப்பதாக ‘ஆஸ்கர்’ விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள் ளார்.இசை நிகழ்ச்சி ஒன்றில், (Ekam Satt Unity Concert: The 50thSymphony) பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் இணைந்து இசையமைக்கவும், பாடவும் இருக்கின்றனர்.மும்பையில் பிப்ரவரி 29-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.முன்னதாக இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்புஅண்மையில் நடைபெற்றது. அப்போது எழுப்பப்பட்ட கேள் விக்குத்தான், “ஒற்றுமை” என்ற சொல், இன்றைய இழிந்த உலகில் அதன் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று ரஹ்மான் பதிலளித்துள்ளார்.“நாட்டில் இன்று பிரிவினைஅரசியல் நடந்துகொண்டிருப்பதால், பிளவுவாத மனநிலையே நிலவுகிறது. எனினும் மக்கள் ஒற்றுமையைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களாகிய நாம் அனைவருமே நம்பிக்கையையும், அறிவையும் பகிர்வதில் தான் அமைதி கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், ஒரு புதிய உலகத்தின் பிறப்பு இருக்கிறது என்றுதான் நினைப்பதாகவும், அது அழகாக இருக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ள ரஹ்மான்,அதனை நோக்கி, இசை நிகழ்ச்சிமூலம் இப்போதே தாங்கள் நகர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

;