தேசம்

img

பீகாரில் இடதுசாரிகள் தேர்தல் பிரச்சாரம்... இளைஞர்களின் அணிவகுப்புடன் முன்னேற்றம்

புதுதில்லி
பீகாரில் ஆர்ஜேடி தலைமையிலான பெரும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் இடது கட்சிகளுக்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தலைவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். 

ஜேஎன்யுவில் ஏபிவிபியின் ஆக்கிரமிப்பை எதிர்த்த மாணவர் சங்கத் தலைவரும், எஸ்எப்ஐ தலைவருமான ஐஷி கோஷ், முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்க நிர்வாகியாக செயல்பட்ட தீப்சிதா தார் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் அபிஷேக் நந்தன் ஆகியோர் சிபிஎம்-இன் நட்சத்திர பட்டியலில் உள்ளனர்.ஜேஎன்யு மூலம் தீவிர அரசியலுக்கு வந்த பலர் பிரச்சாரத்தில் சேருவார்கள். மாணவர் சங்கத்தலைவர் சிபிஐயின் கன்னையாகுமார் அவர்களில் மிக முக்கியமானவர். சிபிஐ (எம்எல்) பட்டியலில் உள்ள கவிதா கிருஷ்ணன் மற்றும் என். சாய் பாலாஜி ஆகியோரும் முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர்கள்.சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஹன்னன் முல்லா, சுபாஷினிஅலி, முகமது சலீம், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.கே. ராகேஷ், பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, தில்லி பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர். ராஜீவ் குமார் மற்றும் பலர் அக்டோபர் 20 முதல்30 வரை பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா, சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சிபிஐ கட்சியின் அதுல் குமார் அஞ்சன், அமர்ஜித் கவுர், ராஜு யாதவ், சுதேஷ் பட்டாச்சார்யா ஆகியோரும் பீகார் வருகை தர உள்ளனர்.

;