வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேசம்

விரைவில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு

புதுதில்லி:
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை சங்பரிவாரக்கும்பல் இடித்து தகர்த்தது.இந்த இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 4,000 மத்திய போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளது.

;