சனி, செப்டம்பர் 19, 2020

தேசம்

img

கங்கனாவிற்கு மாநிலங்களவையில் ஜெயாபட்சன் பதிலடி

’’இந்தி சினிமா உலகில் போதைப்பொருள் பழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பாலிவுட் திரைத்துறையினரிடையே சோதனை நடத்தினால் ஏராளமான ’’ஏ-கிரேட்’’ நட்சத்திரங்கள் கம்பி எண்ண வேண்டியதிருக்கும்’’ என நடிகை கங்கனா ரணாவத் கூறி இருந்தார்.
கங்கனாவின் கருத்துக்கு மாநிலங்களவையில் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயாபச்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
‘’5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 50 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் சினிமா உலகம்,  வேலைவாய்ப்பை தருகிறது. சினிமா மூலம் புகழும்,, பணமும் சம்பாதித்தோர், இந்த துறையைக் கேவலப்படுத்துவதை ஏற்க முடியாது. என்று அவர் கூறினார்.
ஜெயாபச்சன் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
இதைத்தொடர்ந்து ,இந்தி திரைத்துறையினர் ஜெயா பச்சன் பேச்சிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 

;