திங்கள், அக்டோபர் 26, 2020

தேசம்

img

பணவீக்கம் 7.59 சதவிகிதமானது... 6 ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு

புதுதில்லி:
2020 ஜனவரியில், நாட்டின் சில்லரைப் பணவீக்கமானது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.59 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அத்துடன் தொடர்ந்து 6-ஆவது மாதமாகவும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசே வெளியிட்ட தரவுகளின் படி, நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் சில்லரைப் பணவீக்கம் 2019 ஜனவரியில் 1.97 சதவிகிதமாக ஆகஇருந்தது. பணவீக்க விகிதம் 2019 ஜனவரியில் 2.05 சதவிகிதமாக இருந்தது.இந்நிலையில் 2019 டிசம்பரில் சில்லரைப்பணவீக்கம் 7.35 சதவிகிதமாக உயர்ந்து, தற்போது 7.59 சதவிகிதத்தை எட்டியுள்ளது. நவம்பர் மாதத்தில் 8.6 சதவிகிதமாக இருந்த, அத்தியாவசிய பொருட்களின் விலை 2019 டிசம்பரில் 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

தானியங்கள் வகைகள் 5.25 சதவிகிதம், மீன் மற்றும் இறைச்சி 10.50 சதவிகிதம், முட்டை 10.41 சதவிகிதம், பால் மற்றும் பால் பொருட்கள் 5.63 சதவிகிதம், எண்ணெய்மற்றும் கொழுப்புகள் 6.65 சதவிகிதம், பழங்கள் 5.76 சதவிகிதம், காய்கறிகள் 50.19 சதவிகிதம், பருப்பு வகைகள் 16.71 சதவிகிதம், சர்க்கரை 4.58 சதவிகிதம், மசாலாபொருட்கள் 8.25 சதவிகிதம் என்று விலைகள் அதிகரித்துள்ளன.மறுபுறத்தில் தொழிற்துறை உற்பத்தியும் (Index of Industrial Production), டிசம்பரில் கடுமையான சரிவைச் சந்தித் துள்ளது. தொழில்துறை உற்பத்தி டிசம்பரில் 0.3 சதவிகிதம் என்ற அளவில் மட்டுமேஅதிகரித்து 2.5 சதவிகிதமாக உள்ளது. 2018 டிசம்பரில் இருந்த 4.5 சதவிகித வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2019 டிசம்பரில் மின் உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. சுரங்கத் துறை உற்பத்தி முன்பு 5.4 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்தது. தற்போது அது 1 சதவிகிதமாக சரிவைக் கண்டுள்ளது.ஒட்டுமொத்தமாக நடப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 0.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

;