வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தேசம்

img

கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் கோமியம் பார்ட்டி... இந்து மகாசபை சாமியார் சக்கரபாணி கோமாளித்தனம்

புதுதில்லி:
மாட்டின் சிறுநீரைக் (கோமியம்) குடித்தால், கொரோனாவைக் குணப்படுத்தலாம் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாகவே கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டு வந்தனர். அந்த கோமாளித்தனம் தற்போது தீவிரமடைந் துள்ளது.ஏதோ, டீ பார்ட்டி நடத்துவதைப் போல, “கோமியம் பார்ட்டி”நடத்தப் போவதாக இந்து மகா சபைத் தலைவரான சாமியார் சக்கரபாணி அறிவித்துள்ளார். எல்லோரும் ஒன்றாகக் கூடி,மாட்டின் சிறுநீரை அருந்துவதுதான் இந்த கோமியம் பார்ட்டியாகும். இதன் மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் சாமியார் சக்கரபாணி.

“நிகழ்ச்சியில் கோமியம் வழங்குவதற்காக கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதேநேரம், கோமியத்துடன், பால் சார்ந்தபொருட்கள் மற்றும் மாட்டுச் சாணம், அகர்பத்தி ஆகியவை விற்கப்படும். இதனால், கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழியும்” என்று கூறியுள்ளார்.பிற விலங்குகளை கொன்று சாப்பிடுபவர்களுக்கே வைரஸ் தாக்குதல் வருகிறது; வைச உணவுசாப்பிடுவர்கள் இதனால் கவலைப்பட தேவையில்லை என்றும் சாமியார் சக்கரபாணி ‘ஆராய்ச்சி செய்து’ கண்டுபிடித்துள்ளார்.

;