ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேசம்

img

கொரோனா வைரஸ் இயற்கையாகவே அழிந்துவிடும்

புதுதில்லி:
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் அளித்த பேட்டியில் “கொரோனாவுக்கு, ஒரு நீண்டகால தீர்வு, தடுப்பூசி அல்லது மருந்துஅடிப்படையிலான சிகிச்சையில் தான் உள்ளது” என்று  வலி யுறுத்தினார். 

ஆனால், மருந்து கண்டுபிடிக்க ஒரு வருடத்திற்கும் மேலாக காலக் கெடு நீளக்கூடும் என்பதையும் ஒப்புக் கொண்டார். இங்கிலாந்தில் கருத்துக் கணிப்பு ஒன்றுக்கு பதிலளித்தவர்களில்  25 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்த னர். ஒரு வேளை தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாமலேயே போனால் என்னாகும் என்ற கேள்வியை, இது எழுப்பியது. இந்நிலையில், தடுப்பூசி இல்லாமலேயே வைரஸ் பரவும் வேகத்தை குறைக்க முடியும் என்று சீனாவை சேர்ந்த மருத்துவ ஆய்வகம் அண்மையில் ஒரு கருத்தை வெளி யிட்டது. 

அதாவது, பெய்ஜிங் பல்கலைக் கழக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்ட ஆண்டிபாடி மருந்து பலன்அளித்துள்ளது. இது, பாதிக்கப்பட்ட வர்களுக்கு, குணமடையும் வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கொரோனா வைரஸி லிருந்து குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.இந்நிலையில்தான், உலக சுகாதார அமைப்பின் (W.H.O.) தலைவராக மட்டுமன்றி, புற்றுநோய் திட்டத்திற்கும் இயக்குநராக இருந்துள்ள பேராசிரியர் கரோல் சிகோரா, “தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக இயற்கையாகவே கொரோனா வைரஸ் பொசுங்கி விடும் (burn out)”என்று, புதிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

“நாம் வைரஸை பலமிழக்க வைக்க வேண்டும், பின்னர் அது தானாகவே போய்விடும். சமூக இடைவெளியைப் பின்பற்றினால், இது சாத்தியமானதுதான் என்பது எனது கருத்து; மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் இருப்பதாக கருதுகிறேன்” என்றும் சிகோரா கூறியுள்ளார்.

;