வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தேசம்

img

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 24 879 பேருக்கு கொரோனா தொற்று 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 24,879 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 7,67,296 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல்,கொரோனா தொற்றால்  21,129 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். 476378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா (6,603), தமிழகம் (3,756), கர்நாடகா (2,062), டெல்லி (2,033) தெலுங்கானா (1,924) உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. 
2.23 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்பு எண்ணிக்கையை கொண்ட மகாராஷ்டிரா நாட்டிலே பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள முதல் மாநிலமாக உள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டிலே அதிக உயிரிழப்பை (198) கொண்ட மாநிலமாகவும் உள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் (64), கர்நாடகாவில் (54), டெல்லியில் (48), மேற்குவங்கத்தில் (23) என்ற அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தை எட்டிய நான்கு நாட்களில் இந்த வாரத்தில் 7 லட்சத்தை எட்டியது. அதேபோல், 
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா (30,54,695), பிரேசிலை (17,13,160) தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 
 

;