சனி, செப்டம்பர் 26, 2020

தேசம்

img

2 லட்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரத்து 706 பேராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்துய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 8,171 புதிய கொரோனா  பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  204 இறப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 பேராக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 97,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,358 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில்  70 ஆயிரத்திற்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் 2,360-க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்டுள்ளது.குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் நிதி தலைநகரான மும்பை, மாநிலத்தின் கொரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது, அங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,300-ஐ  கடந்து இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

;