தேசம்

img

மோசமான வைரஸை பரப்பும் பாஜக.....  முன்னாள் மத்திய அமைச்சர் சாடல்

புதுதில்லி:
பிற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை கவர்ந்திழுக்கும் மோசமான வைரஸை பாஜக பரப்பி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் சாடியுள்ளார்.

குஜராத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தலா 2 வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன.இந்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்தடுத்து 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுயசார்பு என பாஜக கூறி வருவது தங்கள் கட்சிக்காக மட்டுமே; நாட்டுக்காக அல்ல. பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக அக்கட்சி ஏராளமான பணத்தை சம்பாதித்துவிட்டது. தற்போது அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பிற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை பாஜகவினர் விலைக்கு வாங்கி வருகின்றனர். இதன் மூலம் பிற கட்சி எம்எல்ஏக்களை கவர்ந்திழுக்கும் மோசமான வைரஸை பாஜக பரப்பி வருகிறது என்று தெரிவித்தார்.

;