வியாழன், ஆகஸ்ட் 13, 2020

தேசம்

img

‘உங்கள் குதிரையை குளிப்பாட்டிக் கட்டுங்கள்’... அமித்ஷாவுக்கு வங்கதேச அமைச்சர் பதிலடி

புதுதில்லி:
வங்கதேசத்தில், சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய குற்றச் சாட்டுக்களுக்கு, வங்கதேச நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர்ஏ.கே. அப்துல் மோமென் பதிலடி கொடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா, “வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், தங்களது மத நடவடிக்கைகளில்சுதந்திரமாக ஈடுபட முடியாமல் பாதிக் கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில், வங்கதேசத்தில் வெளியாகும் ‘டாக்கா ட்ரிபியூன்’(Dhaka Tribune) என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வங்கதேச நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்டாக்டர் ஏ.கே. அப்துல் மோமென்மறுப்பு தெரிவித்துள்ளார்.“வங்கதேசத்தில் இந்துக்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்ற இந்திய உள்துறை அமைச்சரின் கருத்து தேவையற்றது மற்றும் பொய்யானது; யார் அவருக்கு இந்ததரவை கொடுத்திருந்தாலும் அதுஉண்மையற்றது” என்று கூறியுள்ளமோமென், “உலகில் மத நல்லிணக்கத்தைப் பேணும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.“எங்கள் நாட்டில் சிறுபான்மையினர் என யாரும் கிடையாது; மற்றமதங்களைச் சேர்ந்த எவரும் இங்கு ஒடுக்கப்படுவதில்லை; எங்கள் நாட்டின்பல முக்கியமான முடிவுகள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த நபர்களால்எடுக்கப்படுகின்றன. நாங்கள் யாரையும் அவர்களின் மதத்தை வைத்துதீர்மானிப்பதில்லை. எல்லா மதங் களையும் நாங்கள் மதிக்கிறோம். சிறுபான்மையினர் என்று கூறப்படுவோரையும், சமக் கண்களில் வங்கதேச குடிமக்களாகவே நாங்கள் காண்கிறோம்; ஒரு வேளை அமித்ஷா சில காலம் வங்கதேசத்தில் தங்கியிருந்தால், இங்குள்ளமத நல்லிணக்கத்தை அவரால் தெரிந்துகொள்ள முடியும்” என்றும் விரிவாக கூறியுள்ள அப்துல் மோமென்; இந்தியாவில் பல பிரச்சனைகள் உள்ளன; இந் திய ஆட்சியாளர்கள் முதலில் அதை தீர்க்கட்டும் என்றும் சாடியுள்ளார்.

“அமித்ஷாவின் கருத்துகளை ஆய்வு செய்த பின், இந்திய அரசின் கவனத்திற்கு இவ்விவகாரத்தை எடுத்துச் செல்வோம்” என்று கூறியுள்ள மோமென், இரு நாடுகளுக்கும்இடையேயான உறவை பாதிக்கும்வகையில், இந்தியா நடந்துகொள் ளாது என நம்புவதாகவும் குறிப்பிட் டுள்ளார்.அதேநேரம் “வரலாற்று அடிப்படையிலான மதச்சார்பற்ற நிலையிலிருந்து எந்தவொரு விலகலும் இந்தியாவை பலவீனப்படுத்தக் கூடும்”என்ற எச்சரிக்கையையும் டாக்டர்ஏ.கே.அப்துல் மோமென் விடுத்துள்ளார்.

;