வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தேசம்

img

கொல்கத்தாவில் பலியான 57 வயது முதியவர்.... வெளிநாட்டுப் பயணம் செய்யாதவருக்கும் பாதிப்பு!

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், 30 மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன.

ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 75 பேருக்கு,கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையிலும், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கிய நிலையிலும், மாநிலங்கள் இந்த நடவடிக்கைக்கு சென்றுள்ளன. மிசோரம், சிக்கிம் ஆகிய இரு மாநிலங்கள்மட்டுமே திங்கட்கிழமை வரை தடை உத்தரவை அமல்படுத்தாமல் இருந்தன. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் பகுதியளவு தடையுத்தரவை அறிவித்துள்ளன. இதில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 80 மாவட் டங்கள் உள்ளடங்கும். 

கொரோனா தொற்று பாதிப்புக்கு, திங்கட்கிழமையன்று மேற்குவங்கத்தைச் சேர்ந்த 57 வயது முதியவர் ஒருவரும், இமாசலப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் என 2 பேர் பலியாகினர். இவர்களில் கொல்கத்தாவைச் சேர்ந்த முதியவர், எந்த வெளிநாட்டுப் பயண பின்னணியும் இல்லாத நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;