ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேசம்

img

பாலியல் வீடியோவில் பாஜக மாநிலத் தலைவர்

பன்ஜிம்:
பாஜக தலைவர்களும், அவர்கள் மீதானகொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுக் குற்றங்களும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாததாகி விட்டது. அதிலும், பாஜக-வினரின் பாலியல் குற்றங்கள் தொடர்பாக, மாதம் ஒருமுறையாவது வீடியோக்கள் வெளியாவது வாடிக்கையாகி விட்டது.அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், பெண்ணுடன் நிர்வாணமாக இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியைப் போன்று யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக இருப்பது, டாமன் டையூ பகுதி ஆகும். இந்த யூனியன் பிரதேசத்தின் பாஜக தலைவராக இருப்பவர் கோபால் டண்டல் ஆவார்.இவர், பெண் ஒருவருடன் நிர்வாணக் கோலத்தில் இருக்கும் வீடியோதான் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.இதையடுத்து, கோபால் டண்டல், தனதுகட்சிப் பதவியை ராஜினாமா செய்துள் ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும்,டண்டலின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

;