வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேசம்

img

அரசமைப்புச் சட்டத்தில் மோசடி காஷ்மீருக்குத் துரோகம் இழைப்பு... சிபிஎம் சார்பில் சிறு பிரசுரம் வெளியீடு

புதுதில்லி:
அரசமைப்புச் சட்டத்தில் மோசடி – காஷ்மீருக்குத் துரோகம் (Fraud on Constitution – Kashmir betrayed) என்னும் தலைப்பில் சிறுபிரசுரம் வியாழன் அன்று மாலை புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் வெளியிடப்பட்டது. பிரசுரத்தை வெளியிட்டு பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசும்போது: இந்த சிறுபிரசுரம் காஷ்மீர்மக்களுக்கு எப்படியெல்லாம் துரோகம் இழைக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் காஷ்மீருக்கு எதிராக அரசாங்கத்தால்கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொய்ப்பிரச்சாரங்கள்அனைத்தும் எப்படியெல்லாம் உண்மையல்ல என்பதையும் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கிறது என்று கூறினார்.

புத்தக வெளியீட்டின்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியதாவது: 370ஆவது பிரிவை சேர்த்ததில் ஆர்எஸ்எஸ்-க்கும் பங்கு உண்டு என்பதை மூடிமறைந்திட இப்போது அது முயற்சித்துக் கொண்டிருக்கிறது. 370ஆவதுபிரிவை சேர்த்திட நேரு அமைச்சரவை முடிவு செய்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஷியாமா பிரசாத் முகர்ஜியும் அதில் அங்கம் வகித்தார். அப்போது எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். காஷ்மீர் மக்கள்
தங்கள் மத வித்தியாசங்களைப் புறந்தள்ளிவிட்டு மகாராஜாவிற்கு எதிராகப் போராடியபோது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கிவந்த பிரஜா பரிஷத் அமைப்பு மகாராஜாவிற்கு ஆதரவாக நின்றது. இவ்வாறு பிருந்தா காரத் கூறினார்.

;