புதன், செப்டம்பர் 23, 2020

தேசம்

img

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று...   

தில்லி 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் குடியரசு தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது,"கடந்த வாரம் மருத்துவமனை அலுவல் காரணமாக சென்ற பொழுது எனக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் என்னுடன் கடந்த வாரம் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து சுய தனிமைப்படுத்துதலிலும், கொரோனா பரிசோதனையையும் செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 2012-17 காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

;