தேசம்

img

நாட்டில் வேகமாக பரவும் கொரோனா...  கடந்த 24 மணிநேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு தொற்று...

தில்லி 
இந்தியாவில் கடந்த மே மாதம் எழுச்சி பெற்ற கொரோனா வைரஸ் இன்று வரை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 3 மாத காலத்தில் 15 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் குறுகிய காலத்தில் ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது. தற்போது ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 54,865 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 17.51 லட்சமாக உயர்ந்துள்ளது. 

மேலும் 852 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,403 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவை வென்றுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11.46 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்னும் 5.67 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  

;