தேசம்

img

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று....  

தில்லி 
நாட்டில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி மக்கள் பிரநிதிகளான அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ-களுக்கும் கொரோனா தொற்று உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய அமைச்சரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமையில் இருக்கும்படி அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். தற்போது அமித் ஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

;