தேசம்

img

தில்லியில் மேலும் 961 பேருக்கு கொரோனா...  பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது...   

தில்லி 
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் கொரோனா பரவல் கடந்த மாதத்தை விட சற்று குறைந்துள்ளது. பெரும்பாலும் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் இருக்கும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தினசரி பாதிப்பு 961 ஆக குறைந்துள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,37,677 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை (4,002) கடந்தது.     

இன்று ஒரேநாளில் (ஞாயிறு) 1,186 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,317 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 10,356 பேர்  சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  

;