வெள்ளி, அக்டோபர் 30, 2020

தேசம்

img

ஆர்எஸ்எஸ்- லீக் உறவு அம்பலம்... ரமீஸின் ஜாமீனுக்காக குஞ்ஞாலிக்குட்டி தலையீடு

திருவனந்தபுரம்:
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கே.டி.ரமீஸின் ஜாமீனின் பின்னணியில் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி செயல்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. முக்கிய எதிரி பாஜக அல்ல என்று குஞ்ஞாலிக்குட்டி கூறியதை அடுத்து தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ரமீஸின் விடுதலைக்காக லீகின் தலையீடு அம்பலமாகி உள்ளது.

முஸ்லீம் லீக்-ஆர்எஸ்எஸ் ஒப்பந்தத்தின் விளைவாக ஜாமீன் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கைரளி நியூஸ்’ தொலைக்காட்சி செய்தி இதை வெளி உலகுக்கு கொண்டுவந்துள்ளது.ஆர்.எஸ்.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த குஞ்ஞாலிக்குட்டி, ரமீஸின் ஜாமீனுக்காக தலையிட்டார். ஆர்எஸ்எஸ்ஸிடம் லீக் சரணடையும் என்ற புரிதலின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது. சுங்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறியது ஜாமீனுக்கு வழிவகுத்தது. அதிகாரிகளை இடமாற்றம் செய்து குற்றப்பத்தி்ரிகை தாக்கல் செய்வதை தாமதப்படுத்தியது சாதாரணமான ஒன்றல்ல.

ராமீஸ் குன்ஹாலிக்குட்டியின் உறவினர்

தங்க கடத்தல் குற்றவாளி தப்புவிக்கும் விதமாக தவறான தலையீடு மேற்கொண்டுள்ள லீக் தலைமையின் மீது கடும் அதிருப்தி அந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது. சமூதாயத்தை லீக் காட்டிக்கொடுப்பதாகவும், குஞ்றுாலிக்குட்டி லீக்கை விற்றுவிட்டதாகவும் லீக் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

;