புதன், செப்டம்பர் 23, 2020

தேசம்

img

சிஐடியு மூத்த தலைவர் தோழர் கே.முத்துராஜ் காலமானார்

திண்டுக்கல்:
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு உறுப்பினரும் சிஐடியு மூத்தத் தலைவருமான தோழர் கே.முத்துராஜ் வெள்ளியன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 60. 

அவரது மறைவு செய்தியறிந்து  கட்சியின் மாநில செயற்குழுஉறுப்பினர் கே. தங்கவேல்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் சி. பத்மநாபன், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், திண்டுக்கல் நகர் செயலாளர் பி.ஆஸாத், ஒன்றியச் செயலாளர் தா.அஜாய்கோஷ், அடியனூத்து ஊராட்சித்தலைவர் ஜீவானந்தம்,  கட்சியின்  மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்கமிட்டி செயலாளர்கள், உறுப்பினர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சிஐடியு மாநில துணைத்தலைவர் சந்திரன், பஞ்சாலைசம்மேளன தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  சிஐடியு மாவட்டத்தலைவர் கே.பிரபாகரன், மாவட்டச்செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்டப் பொருளாளர் தனசாமி, மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம், கட்டுமானத்தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஊரக மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு, உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தோழர் முத்துராஜ் மறைவிற்கு சிஐடியு மாவட்டக்குழு சார்பாக இரங்கல் தெரிவித்துள்ளது.  

சிஐடியு மாநிலக்குழு இரங்கல்
திண்டுக்கல் சிஐடியு மாவட்டநிர்வாகி கே.முத்துராஜ் மறைவுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர்  ஜி.சுகுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:சிஐடியு திண்டுக்கல் மாவட்டமுன்னாள் தலைவர்   கே.முத்துராஜ் கடந்த சில  ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் 24.7.20 அன்று  மரணமடைந்தார்.  அவருக்கு வயது 60.திண்டுக்கல்   நஞ்சப்பா டெக்ஸ்டைல்சில் தொழிலாளியாக பணியாற்றிய போது சிஐடியுசங்கம் அமைத்த காரணத்தால் நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கையால்   வேலைநீக்கம் செய்யப்பட்டார்.  

அதன்பிறகு முழு நேர தொழிற்சங்க பணியாற்ற தொடங்கி போக்குவரத்து சங்க அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றினார். சிஐடியு மாவட்டதலைவர், மாநிலக்குழு உறுப்பினர், உள்ளாட்சி , பஞ்சாலை சம்மேளன நிர்வாகி என  பல பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியவர். தொழிற்தாவாக்களில்   தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைத்திட பாடுபட்டவர்.  திண்டுக்கல் மாவட்ட தொழிற்சங்க இயக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றிய கே.முத்துராஜ் அவர்களது மறைவுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில்  அஞ்சலி செலுத்துகிறோம்.  அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு சிஐடியுசார்பில் ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;