திங்கள், செப்டம்பர் 21, 2020

தேசம்

img

சிஆர்பிஎப் வீரருக்கு கொலை மிரட்டல்... உ.பி. பாஜக தலைவர் அராஜகம்

சுல்தான்பூர்:
சிஆர்பிஎப் வீரரை, பாஜக தலைவர் ஒருவர், ‘கொலைசெய்து விடுவேன்’ என்று பகிரங்கமாக மிரட்டல்விடுக்கும் வீடியோ, இணையதளங் களில் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சுல்தான் பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர் கலீம். சிஆர்பிஎப் வீரரான இவர், காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். அவரது மூன்று சகோதரர்களும் மற்றும் மருமகனும் கூட இந்திய ஆயுதப்படைகளில்தான் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கலீம் தனது கிராமத்தில் ஒரு வீட்டைக் கட்ட முடிவுசெய்துள்ளார். இதற்கான பணிகளை அவர் தொடங்கிய போதுதான், ​பாஜக-வின் தொகுதித் தலைவரான ஷரவண் மிஸ்ரா, அடியாட்களுடன் வந்து, கலீமை வீடு கட்டக்கூடாது என்றும், தனது எச்சரிக்கையையும் மீறி வீடு கட்டினால், கலீமைஅந்த இடத்திலேயே கொன்று புதைத்து விடுவதாக மிரட்டியுள்ளார். 

இதனை வீடியோ எடுத்த சிலர்,பாஜக தலைவர் மிரட்டும் காட்சிகளை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். நாட்டைக் காக்கும் ஆயுதப்படையைச் சேர்ந்த வீரர்ஒருவருக்கே நாட்டில் இதுதான் நிலையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.இதனிடையே, நூர் கலீமின் புகார் பேரில், பிரிவு -147/427/504/506 ஆகியவற்றின் கீழ், சுல்தான்பூர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எனினும் ஒருவரைக் கூட கைது செய்யவில்லை.

;