வியாழன், அக்டோபர் 1, 2020

தேசம்

img

ஆம்பன் புயல் சேதங்களைப் பிரதமர் பார்வையிட்டார்....

கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் ஆம்பன் புயல் சேதங்களைப் பிரதமர் மோடி வெள்ளியன்று பார்வையிட்டார்.   பின்னர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் சேதங்களைப் பற்றி கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்திற்கு ரூ.ஆயிரம் கோடி நிவாரண நிதியும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2லட்சம் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். 

முன்னதாக மேற்கு வங்காள மாநிலத்தில் ஆம்பன் புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 72 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி வெள்ளியன்று காலை கொல்கத்தா வந்தடைந்தார். 
மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி வெள்ளியன்று ஹெலிகாப்டரில் சென்றபடி பார்வையிட்டார். மேலும் பசிர்ஹத் பகுதியில் புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

;