வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேசம்

img

புதுச்சேரியில் மேலும் 174 பேருக்கு கொரோனா

புதுச்சேரி:
புதுச்சேரியில் வெள்ளியன்று (ஜூலை 31) மேலும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 3,467 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.இந்நிலையில், வெள்ளிக்கிழமை  காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை  தாண்டி உள்ளது. மொத்தம் 16,38,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 779 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக் கிழமை மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3,467 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 49 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில் 2,095 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

;