வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தேசம்

img

கேரளாவில் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் கர்ப்பிணிகள், குழந்தைகள் வீடுகளுக்கு செல்ல அனுமதி

கொச்சி/கோழிக்கோடு:
கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாடு களில் சிக்கித் தவித்த ஒன்பது குழந்தைகள் உட்பட 363 கேரளியர்களைக் கொண்ட முதல் இரண்டு விமானங்கள் கொச்சி மற்றும் கோழிக்கோடு நிலையங்களில் வியாழன் இரவு தரையிறங்கின. கோவிட் அச்சத்தின் பிடியிலிருந்து தாய் மடியில் தஞ்சமடைந்தது போன்ற உணர்வை அவர்கள் வெளிப்படுத்தினர்.

\அபுதாபியிலிருந்து 177 பயணிகள் 4 கைக் குழந்தைகளுடன் வியாழனன்று இரவு 10.08 மணிக்கு கொச்சியில் உள்ள நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் வந்திறங்கினர். இதுபோல் துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் 177 பயணிகள் 5 கைக் குழந்தைகளுடன் 10.34 மணிக்கு வந்திறங்கினர். தாய் மண்ணில் கால்பதித்த அவர்கள், தங்களது நலனிலும் குடும்பத்தினர் நலனிலும் அக்கறை காட்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

ஏற்கனவே, அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் பின்பற்றியே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில் 20 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பரிசோதனை நடத்தினர். அதிகாலை 3.30 மணி வரை மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் கண்காணிப்பு மையங்களில் பின்பற்ற வேண்டிய விழிப்புணர்வு அளித்து மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒரு வாரம் இந்த மையங்களில் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். பின்னர் ஒரு வாரம் வீடுகளில் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

நெடும்பாச்சேரி வந்த 177 பேரில் 49 கர்ப்பிணி களும் 4 கைக் குழந்தைகளும், கரிப்பூர் விமானநிலை யம் வந்தவர்களில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் 14 பேர், 2 கர்ப்பிணிகள், பத்து வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள், 5 கைகுழந்தைகள் வாடகை கார்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள கண்காணிப்பு மையங்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

;