சனி, செப்டம்பர் 26, 2020

தேசம்

img

கரோனா வைரஸ்: சீன சுற்றுலா பயணி ஒருவர் கேரள மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவுக்கு வந்த சீன சுற்றுலா பயணி ஒருவர், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் உகான் நகரிலிருந்து கரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 73 பேர் பலியாகி உள்ளனர். 28,018 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்தியாவுக்கு வந்த சீன சுற்றுலா பயணி ஒருவர் ஹோட்டல்களுக்கு சென்றபோது, கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஹோட்டல்கள் அவருக்கு தங்க இடம் அளிக்க முன்வரவில்லை. 

இந்த நிலையில், அவர் காவல்துறையை அணுகினார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்ததும், கடந்த செவ்வாயன்று கேரளா வந்ததும் தெரியவந்தது. ஆனால், அவரிடம் மருத்துவ சான்றிதழ் எதுவும் இல்லாத நிலையில், அவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

;