சனி, செப்டம்பர் 26, 2020

தேசம்

img

நாடாளுமன்றத்தில் உமர் அப்துல்லா குறித்த பொய் செய்தியை மேற்கோள் காட்டிய மோடி!

நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடி உமர் அப்துல்லா குறித்த பொய் தகவலை மேற்கோள் காட்டி பேசியது அம்பலமாகி உள்ளது.

கடந்த 6-ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேசிவிட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டினார். இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால், பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிக்கப்படும் என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாக, மோடி நாடாளுமன்றத்தில் கூறினார். இந்த தகவலை பாஜக அதன் டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

இந்த தகவலின் உண்மை தன்மையை அல்ட் நியூஸ் ஆய்வு செய்தபோது, கடந்த 2014-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதியன்று, நையாண்டி இணையதளமான ‘ஃபேக்கிங் நியூஸ்’ (Faking News) என்ற இணையதளம் இந்த செய்தியை பதிவிட்டுள்ளது. இந்த பதிவுக்கு முந்தைய நாள், உமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில், ”மோடி அரசு தொலைதூர நினைவாக இருக்கும் போதிலும், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது அல்லது 370 ஆவது சட்டப்பிரிவு இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார். ஆனால் மோடி கூறியது போன்று, பூகம்பம் ஏற்படும் என்றெல்லாம் உமர் அப்துல்லா குறிப்பிடவில்லை என்று தெரியவந்துள்ளது. இதிலிருந்து, நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடி உமர் அப்துல்லா கூறியதாக மேற்கோள் காட்டிய கூற்று கடந்த 6 வருடங்களுக்கு முன் வெளியான ஒரு பொய் தகவல் என்பது அம்பலமாகி உள்ளது.

;