சனி, செப்டம்பர் 26, 2020

தேசம்

img

காஷ்மீர் : உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

ஜம்மு காஷ்மீரின் முன்னால் முதல்வர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடி அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370 ஆவது பிரிவை ரத்து செய்து, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இதை தொடர்ந்து, காஷ்மீர் மாநிலம் முழுக்க தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, தொலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த சூழலில், ஜம்மு காஷ்மீரின் முன்னால் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். முன்னதாக பரூக் அப்துல்லா, பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோரும், பொது பாதுகாப்புச் சட்டம் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மெகபூபா முப்தியின் ட்விட்டர் கணக்கை கையாண்டு வரும் அவரது மகள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களுக்கு முன்பே மெகபூபா முப்தி பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை பெற்றார். 9 வயது சிறுவர்கள் மீது கூட தேசத்துரோக வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகார அரசிடம் இருந்து, இத்தகைய நடவடிக்கைகளை எதிர்பார்த்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
 

;