தேசம்

img

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது.      
இந்தியாவில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  இதுவரை இல்லாத அளவுக்கு 22,252 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 467 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,19,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,39,948 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,59557 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். 

 

;