சனி, செப்டம்பர் 26, 2020

தேசம்

img

பத்தில் ஒரு இந்தியருக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு

பத்தில் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலக புற்றுநோய் தினம் இன்று (பிப்ரவரி 4 ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த நாளில் இரண்டு உலகளாவிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. புற்றுநோயை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த தினத்தை சர்வதேச புற்றுநோய் தடுப்பு கூட்ட (UICC) ஏற்பாடு செய்துள்ளது.  இந்த அறிக்கையில், 10-ல் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் 15-ல் ஒருவர் இந்த நோயின் வீரியத்தால் மரணமடையும் சூழலும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 1.16 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் ஆண்டுக்கு 7,84,800 பேர் மரணமடைகின்றனர். ஆய்வின் அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளாகும் 5.70 லட்சம் ஆண்களுள் அதிகப்படியானோர் வாய் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், நுரையீரல், பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களுள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், குடல் புற்றுநோய் ஆகியப் பிரச்னைகளாலே 60 சதவிகிதம் பேர் உள்ளனர். ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 1,62,500 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனராம்.
 

;