தேசம்

img

கடிதம் எழுதிவைத்து விட்டு தொழிலதிபர் தற்கொலை

அவுரங்காபாத்:
ஜி.எஸ்.டி. வரியை செலுத்த முடியாததால் தொழிலதிபர் ஒருவர் தற் கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் வாலுஜ் தொழிற் பேட்டையில் விஷ்ணு ராம்பாவ் கலவானே (53) என்பவர் இரும்பு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர், பந்தபூர் பகுதியில் உள்ளதனது வீட்டில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விஷ்ணு ராம்பாவ் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்று அவர் களுக்கு கிடைத்துள்ளது.அதைப் படித்துப் பார்த்தபோது, ‘ஜி.எஸ்.டி. வரியை செலுத்த முடியாத காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று விஷ்ணுராம்பாவ் எழுதி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

;