செவ்வாய், செப்டம்பர் 22, 2020

தேசம்

img

குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்க்கும் இடம்... பாஜக கூட்டணி கட்சியான அகாலிதளம் கோரிக்கை

அமிர்தசரஸ்:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களையும் இணைக்க வேண்டும் என்று, பாஜக-வின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும், பிரோஸ்பூர் மக்களவைத் தொகுதிஎம்.பி.யுமான சுக்பீர் சிங் பாதல் கூறியிருப்பதாவது:குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாமீதான விவாதத்தின் போது, சிரோமணி அகாலிதளம் கட்சியின் கொள்கை மதச்சார்பின்மைதான் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். மதச்சார்பின்மை என்பதுஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை அளிப்பதுதான் என்பதையும் நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.அந்த வகையில், தற்போது திருத்தப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்களையும் சேர்க்க வேண்டும். இதன் மூலம் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதச்சார்பின்மை காப்பாற்றப்படுவது மட்டுமன்றி, இந்தியாவின் புகழும் உலக நாடுகள்மத்தியில் உயரும் என்று சுக்பீர் சிங் கூறியுள்ளார்.

;