வியாழன், அக்டோபர் 22, 2020

தேசம்

img

பஞ்சாப்பில் 3-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல்....

அமிர்தசரஸ்:
விவசாயிகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மத்திய பாஜக அரசுநிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் திரும்பப்பெறக்கோரியும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்றாவது நாளாக சனிக்கிழமையன்றும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.

அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவில் அங்கேயே தூங்கினர். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

;