வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

img

முடிந்தால் எங்களைத் தோற்கடியுங்கள்.... ரவிசங்கர் பிரசாத் சவால்

அகமதாபாத்:
முடிந்தால் பாஜகவைத் தோற்கடித்துப் பார்க்குமாறு, இடதுசாரிகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சவால் விடுத்துள்ளார்.குஜராத் மாநிலம் கேவடியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரவி சங்கர் பிரசாத் பேசியுள்ளார்.

அப்போது, “என்னுடைய இடதுசாரிக் கட்சி நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முடிந்தால் எங்களைத் தோற்கடித்து மத்தியில் உங்களுடைய ஆட்சியைக் கொண்டு வாருங்கள். மதச்சார்பின்மை, ஒற்றுமை மற்றும் மனிதஉரிமைகள் குறித்து எங்களுக்குப்பாடம் எடுக்க வேண்டாம்” என்றுகூறியுள்ளார்.“ராமர் அயோத்தியில் பிறந் தார் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் நம்புகிறது என்றபோதிலும் ராமர் பிறந்ததற்கான ஆதாரங்களைக் கேட்றார்கள். ஆனால், அவர்கள்தான் என்பிஆர் கணக்கெடுப்பு நடந்தால் நாங்கள் எந்தவித ஆவணங்களையும் காட்டமாட்டோம் என சொல்கிறார்கள். இது போலித்தன்மை” என்றும்ரவிசங்கர் பிரசாத் கொதித்துள்ளார்.

;