சனி, செப்டம்பர் 26, 2020

தலையங்கம்

img

வரவேற்கத்தக்க அறிவிப்பு வழிமாறாமல் நின்றிடுக!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக் கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய பகுதிகள் பாது காக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறி விக்கப்படும் என்றும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க இந்தப் பகுதி சிறப்பு வேளாண் மண்டல மாக மாற்றப்படும் என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது.

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு மாநில அரசின் அனுமதியை பெற வேண்டிய தில்லை, மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்று மத்தியில் உள்ள மோடி அரசு அடாவடியாக அறிவித்துள்ள நிலையில்,  முதல்வரின் அறிவிப்பு டெல்டா பகுதி விவசாயிகளுக் கும், மக்களுக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

முதல்வரின் அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், காவிரி பாசனப்பகுதியை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்ப தற்கான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் காவிரி பாசனப்பகுதியை விழுங்கி விடாமல் பாதுகாக்க முடியும். 

காவிரி பாசனப்பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை நிறை வேற்ற முடியாது. விவசாயம் சார்ந்த தொழிற் சாலைகளை மட்டுமே உருவாக்க முடியும். ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு தடை  விதிக்கப்படுவதன் மூலமே விவசாயத்தை, விவ சாயிகளை, உணவு உற்பத்தியை, குடிநீரை பாது காக்க முடியும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால் காவிரி பாசனப் பகுதி பாலைவனமாக மாறிவிடும். மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைப்பது கூட அரி தாகிவிடும். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இடம் பெயர்ந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

இதனால்தான் அந்தப் பகுதி விவசாயிகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். முதல்வரின் இந்த அறிவிப்பு போராடிய அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி என்பது மட்டுமல்ல, மாநில அதி காரங்களை அத்துமீறி பறித்து வரும் மத்திய அரசுக்கு தரப்பட்டுள்ள நல்ல பதிலாகும்.  ஆனால் எட்டுவழிச்சாலை உள்ளிட்ட தமிழகத்திற்கெதிரான திட்டங்களுக்கு அதிமுக அரசு தொடர்ந்து முட்டுக்கொடுத்து வரும் நிலை யில், முதல்வரின் அறிவிப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களையும், கேள்விகளை யும் எழுப்புவது நியாயமான ஒன்றே. காவிரி பாச னப்பகுதியை பாதுகாக்க அந்தப் பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க சிறப்புச் சட்டம் இயற்றுவது ஒன்றே இந்த கேள்விகளுக் கான பதிலாக அமையும். 

அமைச்சர் பாண்டியராஜன் போன்ற பாஜக வின் ஸ்லீப்பர் செல்கள் இப்போதே குட்டையை குழப்ப ஆரம்பித்துவிட்டார்கள். மத்திய பாஜக அரசும் தன்னுடைய மிரட்டலை ஆரம்பிக்கும். தமிழகத்தின் பேரழிவை தடுப்பதில் அதிமுக அரசு உறுதியாக நிற்க வேண்டும் என்பதே மக்க ளின் விருப்பமாகும். 

;