தலையங்கம்

img

மத்திய அரசின் கல்வி மறுப்புக் கொள்கை

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. கல்வி என்பது தற்போது பொதுப் பட்டியலில் உள்ளது. புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்தில் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், அவர்களது கருத்துக்களையும், புறக்கணித்து தன்னிச்சை யாக இந்த கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டுள் ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளு மன்றத்தில் எவ்வித விவாதமும் நடத்தாமல், நாடாளுமன்றத்தை முற்றிலும் புறக்கணித்து இந்த புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கொரோனா கொடுங் காலத்தில் அவசர அவ சரமாக புதியக் கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விதம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்பு என்ற பெயரில் ஆங்காங்கே கண்துடைப்பு நாட கங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலான கல்வி யாளர்களும், கட்சிகளும் இந்த கொள்கையை கடுமையாக எதிர்த்தன. 

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சில அம்சங்க ளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருந்தபோதும் அடிப்படையில் வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே இப்போது ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ள அறிவிப்புகளும் அமைந்துள்ளன.

வரைவு அறிக்கையில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற் போது கட்டாயமல்ல என்று கூறப்பட்டுள்ளதே தவிர கைவிடப்படவில்லை. 

ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக் கல்வியை முடிப்பதற்குள் ஏதாவது ஒரு தொழில் கல்வி அறிவை பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டி ருப்பதும் மறைமுகமாக குலக்கல்வியை திணிக்கும் ஏற்பாடே ஆகும்.

இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை மைய மாக கொண்டே புதிய கல்விக்கொள்கை வரைவு  உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 5ஆம் வகுப்பு வரையிலும் தாய்மொழி அல்லது பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் அடிப்படையில் மும்மொழி திட்டத்தை திணிக்கும் நடவடிக்கை கைவிடப் படவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நடத்தும் கல்வி நிலையங்கள் வைத்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த கல்விக் கொள்கை அமைந்துள்ளது. மேலும் துவக்கக் கல்வியிலி ருந்து உயர்கல்வி வரை முற்றிலும் தனியாருக்கு திறந்து விடுவதை இந்த கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. மாநிலங்களையும், நாடாளு மன்றத்தையும் முற்றாக புறக்கணித்து அவசர அவசரமாக திணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் பெரும்பகுதி ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கும் கொள்கையாகவே அமைந்துள்ளது.

;