சனி, செப்டம்பர் 19, 2020

தலையங்கம்

img

மக்கள் குரலை கேட்காத மனதின் குரல்

பிரதமர் நரேந்திர மோடி “மனதின் குரல்” நிகழ்ச்சியின் வழியாக வெளியிட்டுள்ள கருத்துக் கள் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் கடுமை யான நெருக்கடிக்கு பதில் சொல்வதாக இல்லை,  மாறாக எதார்த்தத்திலிருந்து வெகுதூரம் விலகி நின்று பிரதமர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

இந்தாண்டு சுதந்திர தினத்தில் கொரோனா வின் பிடியிலிருந்து தேசம் விடுதலை பெறுவதற்கு இளைஞர்கள் உறுதியேற்க வேண்டுமென பிரதமர் கூறியுள்ளதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் உலக ளாவிய பெருந்தொற்றாக விளங்கும் கொரோனா வின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்க மத்திய ஆட்சியதிகாரத்தை கையில் வைத்துள்ள பிரதமர் என்ன செய்தார் என்பதை அவர் விளக்கி யிருக்க வேண்டும். கொரோனா தொற்றில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி யிருக்கிறது. நோய்த் தொற்றை சமாளிப்பதிலும், அதையொட்டி அறிவிக்கப்பட்ட பொது முடக் கத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதிலும் மோடி அரசு முழு தோல்விய டைந்துவிட்டது. ஆனால் உலகின் பல்வேறு நாடுகள் தம்முடைய சாதனையை பாராட்டுவ தாக மோடி பெருமிதம் கொள்கிறார். அவ்வாறு யார் பாராட்டினார்கள், என்ன பாராட்டினார்கள் என்பதை வெளியிட்டால் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய தாராளமய, தனியார்மய நடவடிக் கைகளைத்தான் மோடி அரசு தீவிரமாக பின்பற்று கிறது. நாட்டில் அனைத்து துறைகளையும் கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கும், அந்நிய முதலாளிக ளுக்கும் திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை மறைக்க இந்தியாவை சுயசார்பு நாடாக்குவோம் என்ற வார்த்தை ஜாலத்தை மத்திய ஆட்சியாளர்கள் காட்டிக் கொண்டிருக்கி றார்கள். 

சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பது, விவ சாயத்தை பெருக்குவது போன்ற நடவடிக்கைக ளில் ஆர்வமின்றியும், உள்நாட்டு சந்தையை பலப்படுத்தி மக்களின் வாங்கும் சக்தியை பெருக்க எவ்வித நடவடிக்கையுமின்றி சுய சார்பை எவ்விதம் எட்டுவது.

முகக்கவசம் அணிவது, தனிமனித இடை வெளியை பேணுவது போன்றவற்றை தொடர வேண்டுமென பிரதமர் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். முகக் கவசத்திற்கும், சானிடை சருக்கும் ஜிஎஸ்டி வரியை உயர்த்திவிட்டு மக்க ளுக்கு உபதேசம் மட்டும் செய்தால் போதுமா?

சமூக ஊடகங்களில் தேச நலனுக்கு எதிரான விஷயங்களை பரப்பக்கூடாது என்றும் மோடி கூறியுள்ளார். ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் மீதான நியாயமான விமர்சனத்தையும், தேச விரோ தம் என சித்தரிப்பதும், அவ்வாறு கூறுபவர் களை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கை கள் மூலம் அச்சுறுத்துவதும், கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பதும் கூட ஆபத்தானது என்பதையும் பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும்.

;