வியாழன், அக்டோபர் 1, 2020

தலையங்கம்

img

காக்கவா? காவு வாங்கவா?

சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்ற பெயரிலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து கிறோம் என்ற பெயரிலும் தமிழக காவல்துறையி னரின் அத்துமீறிய நடவடிக்கைகளால் உயிரி ழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஹெல்மட் அணிவது கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து தமிழக காவல்துறையினர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மட் அணியாமல் வந்தால் தடுத்து நிறுத்துவதும், வழக் குப்பதிவு செய்வதும் உரிய நடவடிக்கைதான். 

ஆனால் அவ்வாறு இல்லாமல் அத்துமீறும் போது ஏற்படும் உயிரிழப்பு அவர்கள் என்ன கார ணத்திற்காக வாகனங்களை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறார்களோ அதற்கு எதிராக அமைந்து விடுவது மிகக் கொடுமையானது. இத்தகைய உயிரி ழப்புகள் நிகழாவண்ணம் தமிழக காவல்துறையி னர் மிகவும் எச்சரிக்கையாகவும் பொறுப்பாகவும் செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

நவம்பர் 10 அன்று விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உலகம்காத்தான் காட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஐயம்மாள் என்ப வர் காவல்துறையினரின் அத்துமீறலால் உயிரி ழந்துவிட்டார். அவரது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, நிறுத்தாமல் செல்கி றார் என்று நினைத்து லத்தியை வீசியதால் தாக்கு தலுக்குள்ளாகி விழுந்து மரணமடைந்தது கொடு மையானது. 

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் செய்தியாளர்கள் நவம்பர் 12 அன்று ஹெல்மட் போடாததற்கு லத்தி வீசிய சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியபோது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறி யுள்ளார்.

அத்துடன் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை செயல்படுகிறது என்றும் கூறியுள் ளார். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் உத்தரவை அமல் படுத்துகிறேன் என்ற பெயரில் காவல்துறையினர் நடத்தும் அத்துமீறலை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறல் கடந்தாண்டு மார்ச் 8அன்று திருச்சி திருவெறும் பூரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை காவு வாங்கியது. அதேபோல் செப்டம்பர் 20 அன்று சென்னை  செங்குன்றம் அருகே திடீரென நிறுத்தியதால் பின்னால் வந்த லாரி மோதி பிரியா என்ற இளம் பெண் உயிரிழந்த கொடுமையும் நிகழ்ந்தது.

இத்தகைய அத்துமீறல்களுக்கு உரிய நட வடிக்கை என்பது அந்த நிகழ்வில் தொடர்புடைய காவல்துறையினரை  இடமாற்றம் செய்வது மட்டு மல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த பொறுப்புணர்வும் மனித உயிரின் மீதான அக்கறையும் தேவை என்பதை காவல்துறையி னர் உணர்ந்தாலே இத்தகைய கொடுமைகள் நிகழாதிருக்கும். அதற்கு மாநில அரசும், காவல் துறை தலைமையும் மனித நேயத்தோடு செயல்பட வேண்டுமென காவல்துறையினருக்கு அறிவுறுத் தலும் அமல்படுத்தலும் அவசியம்.

;