சனி, செப்டம்பர் 26, 2020

தலையங்கம்

img

ஆறுதல் அளிக்கும் அறிவிப்புகள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்த நிலையில், இதனால் வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள் ளார். இது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக இருந்தா லும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நிவார ணப் பணிகள் இன்னமும் ஏராளமாக உள்ளன.

மத்தியில் உள்ள மோடி அரசைப் பொறுத்த வரை ஒருநாள் ஊரடங்கு மற்றும் மக்களை கைதட்டி, மணியடிக்குமாறு சொன்னதைத் தவிர வேறு எதுவும் உருப்படியாக அறிவிக்கவில்லை. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல பெட்ரோல்- டீசலுக்கான சிறப்பு கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தியுள்ளது மோடி அரசு. சொந்தநாட்டு மக்களின் மீது இந்தளவுக்கு வன்மம் காட்டுகிற அரசாக மோடி அரசு உள்ளது.

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதா ரர்களுக்கும் தலா 1000 ரூபாய், நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி கூடுத லாக ரூ.1000, ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.1000, அவர்களுக்கு 17 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் கூடுதல் சம்பளம், கொரோனா தடுப்புப் பணி யில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதா ரப் பணியாளர்களுக்கு ஒரு மாதகால சிறப்பூதி யம் என ரூ.3,250 கோடி அளவுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. எனினும் நிலைமையை சமாளிக்க இது போதுமானதல்ல. 

எனவே இதை முதல்கட்ட அறிவிப்பாக வைத்துக்  கொண்டு அடுத்தடுத்து நிலைமைக் கேற்ப தேவையான உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும். அதேபோல வேலை இழக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கிடைப் பதற்கான உத்தரவையும் அரசு பிறப்பிக்க வேண்டும். 

குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண  உதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை நடைமுறைப்படுத்த பொருத்தமான ஏற்பாடு அவசியம். பண்டிகை காலங்களில் வழங்கப்படும் பரிசுத் தொகை போல ரேசன் கடைகளில் கூட்டம் கூட்டுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். போக்குவரத்துத் துறையின் முன் யோசனையற்ற நடவடிக்கையால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கானவர் கள் பேருந்துக்கு கூடி நின்றது ஆபத்தை வரவ ழைக்கும் செயலாகும். குடும்ப அட்டைதாரர்க ளின் வீடுகளுக்கு இந்த தொகையை முறை கேடின்றி கிடைத்திட பொருத்தமான நடவடிக் கையை எடுக்க வேண்டும்.

கொரோனா சமூகத் தொற்று ஆபத்தான நிலையில் இருப்பதாக அரசு எச்சரித்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஒத்து ழைப்பதும் அதே நேரத்தில் அவர்கள் வாழ்வாதா ரத்திற்கு அரசு பொறுப்பேற்பதும் காலத்தின் தேவையாகும்.

;