தலையங்கம்

img

மறைக்கப்பட்ட மரணங்கள் வெளிப்படுத்தும் உண்மைகள்

தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாகவும், அரசின் தகவல்களில் முரண்பாடு இல்லையென்றும், நம்பகத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் முதல்வரும், அமைச்சர்களும் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசு க்கு இல்லை என்று சாதித்து வந்தனர்.

குறிப்பாக சென்னை மாநகரில் கொரோனா மரணங்கள் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிடும் தகவல்களுக்கும், மாநகராட்சி வெளியிடும் தகவல்களுக்கும் இடைவெளி இருக் கிறது என்று ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டப் பட்டது. அப்போதும் அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

தற்போது மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை 444 கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதை அரசே ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நிகழ்ந்த கொரோனா மரணங்களை வெளியிடுவதில் அரசு திட்டமிட்டு குழப்பம் செய்தது. கொரோ னாவினால் இறந்தால் கூட அவர்களுக்கு ஏற்கெ னவே வேறு மருத்துவ பிரச்சனைகள் இருந்தன என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கள ஆய்வு அடிப்படை யில் 444 மரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதா கவும், ஐசிஎம்ஆர் விதிகளின்படி இந்த எண் ணிக்கையும் கொரோனா பாதிப்பால் மரணம டைந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக் கையும் சேர்த்தால் சென்னையில் கொரோனா மரணம் 1939 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா விஷயத்தில் அரசின் தடுமாற்றத் திற்கு இதுவும் ஒரு உதாரணமாகும். துவக்கத்திலி ருந்தே கொரோனா பாதிப்பை முன்னுணர்வதில் அரசிடம் தடுமாற்றம் இருந்தது. தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் அணுகுமுறை தான் இருந்தது. தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்துவிட்டதாக அரசே ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில்  கிராமங்களிலும் கூட கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை சமாளிப்பதற்கான கட்டமைப் பின்றி மாவட்ட நிர்வாகங்கள் திணறி வருகின்றன. பரிசோதனைகளை அதிகப்படுத்துவது என்பது நடைமுறையில் இல்லை. நோய் தொற்று கண்டறி யப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. அதனால் பெரும்பாலான தனியார் மருத்துவமனை கள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு கொள்ளையடித்து வருகின்றன. எனவே இப்போதாவது அரசு மற்றும் மாவட்ட நிர்வா கங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு நோய்த் தொற்றை கட்டுப்படுத்தி மக்களிடம் ஏற்பட்டுள்ள பீதியை போக்க வேண்டும்.

 

;