திங்கள், செப்டம்பர் 28, 2020

தமிழகம்

img

குடிநீர் கேட்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது தடங்கம் கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்துதனியார் சிமிண்ட் ஆலை, பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது. தடங்கத்திற்குகுடிநீர் வழங்க பயன்பட்டு வந்தமின் மோட்டார் கடந்த இரண்டுமாதங்களுக்கு முன்பு பழுதாகியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் அதை சீரமைக்கவில்லை. பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதுனால், கோபமடைந்த மக்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பின்னர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.நேரு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாளில் மின் மோட்டார் சீரமைக்கப்பட்டு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

;