புதன், செப்டம்பர் 23, 2020

தமிழகம்

img

ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று 

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்குகொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வருவோர் தனியார்
கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனைக்குப் பின்பே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னையிலிருந்து வருகை  தந்த மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டியைச் சேர்ந்த 25 வயது ஆண், சாத்தூர் வசந்தம்நகரைச் சேர்ந்த 40 வயது ஆண், வீர சோழன் பகுதியைச் சேர்ந்த 27 வயது ஆண், திருச்சுழி பகுதியைச்சேர்ந்த 30 மற்றும் 25 வயது ஆண்,  பந்தல்குடியைச் சேர்ந்த 65 வயது பெண், சூலக்கரை வ.உ.சிநகரைச் சேர்ந்த 51 வயது ஆண், சிவகாசி, செங்கமலப்பட்டியைச் சேர்ந்த 20வயது ஆண்  என மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் அரசுமருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

;