வியாழன், செப்டம்பர் 24, 2020

தமிழகம்

img

98 போலீசாருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை

விருதுநகர்:
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் 98 காவலர்களுக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டக் காவல்துறை சுழற்சி முறையில் காவலர்களை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் ஒரு குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதில், கடந்த ஒரு வாரம் விடுப்பில் இருந்த சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 98 பேருக்கு வியாழனன்று வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. விருதுநகர் அரசுத் தலைமை மருத்துவமனையில் இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட தனி வார்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 

;