வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தமிழகம்

img

கடலூரில் மருத்துவக் கல்லூரி

சென்னை,பிப்.14- அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து டன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று, கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும். ஒரு லட்சம் கட்டுமான தொழிலாளர்க ளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் பாது காப்பு உபகரணங்கள் வழங்கப்படும். தமிழ் நாடு மாநில குடும்ப தரவு தளம் உருவாக்க 47.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், வழக்கற்றுப் போன படிப்புகள் நீக்கப்பட்டு, தொழில் துறையினரின் தேவைக்கேற்ற பயிற்சிகளை வழங்கும் பிரிவுகளைச் சேர்க் கப்படும். தொழிற் பயிற்சி நிலையங்களில் 4.77 கோடி ரூபாய் செலவில், தகுதி வாய்ந்த நபர்களுக்கு மின்-வாகனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை அரசு தொடங்கியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு

அரசு கட்டிடங்களின் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இனி  ஆண்டுதோறும் நிதி  ஒதுக்கப்படும். இதற்கென 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 76 கோடி ரூபாய் செலவில்  மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும்.

குழந்தை நலன் கொள்கை

மகளிருக்கான திருமண உதவித் திட்டங்கள், இருச்சக்கர வாகனம் வழங்கும் திட்டம் , மகளிர் நலத்திட்டங்களுக்காக 78 ஆயி ரத்து 796 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 37 மாவட்டங்களில் தலா 2 வட்டாரங்களில் முதியோர் ஆதரவு மையம் தொடங்கப்படும். 106 கோடி ரூபாய் செலவில் 223 ஆதிதிரா விடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்  படுத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள பழங்குடியினர் குடும்பங்களில் 8 ஆயிரத்து 803 குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.

 

;