வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தமிழகம்

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் கோரிக்கை

மதுரை ஜூலை 5- கொரோனா நோய் தொற்று காலங்களில் பணி புரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கவேண்டும். அங்காடிகளில் பணி புரிந்த பட்டியல் எழுத்தர், எடையாளர்களுக்கு, போக்குவரத்து செலவுக்காக தினமும் ரூ.200 வழங்க வேண்டும். ஊழியர்களின் பாதுகாப்புக்காக காப் பீட்டுத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டு மென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மதுரை மண்டல அலுவலகத்தில் கூட்டம் நடை பெற்றது. மண்டலத் தலைவர் கதிரேசபாண்டியன் தலைமை வகித்தார்.  சிஐடியு பொருளாளர் அழகு லட்சுமணன், மாநிலத் துணைத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;